🐐 தமிழ் இம்போஸ்டர் விளையாட்டு · இலவசம்

கருப்பாடு: தமிழ் இம்போஸ்டர் விளையாட்டு, ஆன்லைனில்

நண்பர்கள், குடும்பத்தோட சேர்ந்து விளையாட ஒரு ஜாலியான தமிழ் விளையாட்டு. எல்லாருக்கும் ஒரே தமிழ் வார்த்தை கிடைக்கும். ஒருத்தருக்கு மட்டும் கிடைக்காது. அவர்தான் கருப்பாடு! க்ளூ கொடுங்க, பேசுங்க, ஓட்டு போட்டு கண்டுபிடிங்க.

எப்படி விளையாடுவது?

ஒரு நிமிஷத்துல கத்துக்கலாம்.

🐑

ஒரே வார்த்தை

எல்லாருக்கும் ஒரே ரகசிய வார்த்தை. கருப்பாடுக்கு மட்டும் இல்லை.

🗣️

ஒரு க்ளூ

ஒவ்வொருத்தரும் அந்த வார்த்தை சம்பந்தமா ஒரு க்ளூ சொல்லணும்.

🗳️

ஓட்டு போடுங்க

யார் மேல சந்தேகம்? பேசி, ஓட்டு போட்டு வெளியே அனுப்புங்க.

🐐

கடைசி வாய்ப்பு

மாட்டிக்கிட்ட கருப்பாடு வார்த்தையை சரியா சொன்னா ஜெயிச்சிடும்!

ஏன் கருப்பாடு?

  • முழுக்க இலவசம். டவுன்லோட் வேண்டாம், browser-லயே விளையாடலாம்.
  • ஆன்லைன் அல்லது ஒரே போன். வேற ஊர்ல இருந்தாலும் சேர்ந்து விளையாடலாம்.
  • 3 முதல் 20 பேர் வரை. குடும்ப விழா, காலேஜ் நண்பர்கள், ஆபீஸ் டீம், எல்லாருக்கும் ஏத்தது.
  • நம்ம வாழ்க்கையில இருந்து 1,000+ வார்த்தைகள். சாப்பாடு, கோயில், திருவிழா, சினிமா, வண்டிகள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கருப்பாடு விளையாட்டு இலவசமா?

ஆமாம். கருப்பாடு முழுக்க இலவசம். உங்க மொபைல் browser-லயே விளையாடலாம், எதையும் டவுன்லோட் பண்ண வேண்டாம்.

வேற வேற ஊர்ல இருக்கிற நண்பர்களோட விளையாட முடியுமா?

முடியும். "Online" தேர்வு செய்து ஒரு ரூம் உருவாக்குங்க. அந்த லிங்கை WhatsApp-ல அனுப்புங்க. எல்லாரும் அவங்க போன்லயே சேரலாம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

குறைஞ்சது 3 பேர், அதிகபட்சம் 20 பேர்.

இன்னைக்கு யாரு கருப்பாடு?

நண்பர்களை கூப்பிடுங்க, ஆட்டத்தை ஆரம்பிங்க!